நீராபானம் இறக்கிய விவசாயியை தாக்கிய போலீசாரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை : கோவையை அடுத்த முத்துகவுண்டனூரில் நீராபானம் இறக்கிய விவசாயியை மது விலக்கு போலீசார் தாக்கியதாகக் கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : கோவையை அடுத்த முத்துகவுண்டனூரில் நீராபானம் இறக்கிய விவசாயியை மது விலக்கு போலீசார் தாக்கியதாகக் கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையை அடுத்த முத்து கவுண்டன் புதூரை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் அங்குள்ள அவருக்கு சொந்தமான அங்காளம்மன் கோவில் தோட்டம் என அழைக்கப்படும் அவரது தென்னந்தோப்பில் தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் இறக்கி உள்ளார். இந்த நிலையில், அதிகாலையில் அந்த தோட்டத்துக்குச் சென்ற மதுவிலக்கு போலீசார், தென்னை மரத்தில் கட்டப் பட்டிருந்த பானைகளை உடைத்துள்ளனர். மேலும் தென்னம்பாளைகளையும் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் மூன்றரை இலட்சம் மதிப்பு கொண்ட 7 தென்னை மரங்கள் சேதமடைந்தன.

இந்நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து, நாரயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க அமைப்பினர் அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, ஆத்திரமடைந்த விவசாயிகள், போலீசாரை கண்டித்து கோசங்கள் எழுப்பினர். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானம் செய்தனர். பின்னர், விவசாயிகள், காவல்துறை மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இது குறித்து, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.எஸ்.பாபு பேசுகையில், தொடர்ந்து இதுபோன்று நீராபானம் இறக்கும் விவசாயிகள் மீது போலீசார் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருவதாகவும் அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா உள்ளது போல, நீராபானம் இறக்க தமிழக அரசும் அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் விரைவில் தமிழக அரசு மனுவை ஏற்று அனுமதி அளிக்கும் என தாங்கள் நம்புவதாக நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இதுபோன்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டால் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...