வீடுகளில் ரசாயனத்தை தவிர்த்து இயற்கை முறையில் சுத்தப்படுத்தலுக்கான சிறுதுளியின் புதிய முயற்சி

கோவை : வீடுகளில் ரசாயனத்தைத் தவிர்த்து, இயற்கை முறையில் சுத்தப்படுத்தலுக்கான கருத்தரங்கம் சிறுதுளி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கோவை : வீடுகளில் ரசாயனத்தைத் தவிர்த்து, இயற்கை முறையில் சுத்தப்படுத்தலுக்கான கருத்தரங்கம் சிறுதுளி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.



நீர் நிலைகள் பாதுகாப்பது மட்டுமின்றி, நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வுகளையும் சிறுதுளி அமைப்பு செயல்படுத்தி வருகின்றது. கடந்த செப்.,18ம் தேதி, வீடுகளில் இயற்கை முறையில் சுத்தப்படுத்தலுக்கான கருத்தரங்கம் சிறுதுளி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் சிறுதுளியின் உறுப்பினர் சங்கீதா சுபாஷ் பேசினார்.

அப்போது, அவர் பேசுகையில், நீர் சேமிப்பு, சுத்தமான நீர் நிலைகள் பாதுகாப்பது ஒவ்வொரு தனி நபரின் கடமை. தொழிற்சாலைகளின் கழிவுகளால் மட்டும் நமது நீர்நிலைகள் மாசடைவதில்லை. ஒவ்வொரு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்களாலும் மாசடைந்து நுரை ததும்பக் காட்சியளிக்கின்றன. தினசரி வீடுகளில் குளிக்க ஷாம்பூ, பாத்திரம் கழுவ, தரை மற்றும் கழிப்பறைகள் சுத்தப்படுத்த என பல விதமான செயற்கைத் திரவங்களை பல நூறு ரூபாய்களைக் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றோம். இதில் சுமார் 52 ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனங்கள் அனைத்தும் வீடுகளில் இருந்து கழிவாக வெளியேறி நீர்நிலைகளில் கலக்கின்றன. சூழல் மாசுபாடும் ஏற்படுகின்றது.

ஆனால் நம் முன்னோர்கள் வீடுகளிலேயே இருந்த இயற்கைப் பொருட்களான சாம்பல், எலுமிச்சை, சீகக்காய், ஆகியவற்றைச் சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தினர். இதனால் அவர்களுக்கும், சூழலுக்கும் தீங்கில்லாமல் இருந்தது. மேலும் வீட்டில் பயன்படுத்திய தண்ணீர் மரங்கள், செடிகளுக்குப் போகுமாறு வடிவமைத்திருந்தனர். இதனால் நிலத்தடி நீரும் உயர்ந்தது. நமது வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே வீட்டு சுத்திகரிப்புகளைத் தயாரித்து பயன்படுத்த முடியும்.

ஹேண்ட்வாஷுக்கு பதிலாக எலுமிச்சை, ஆரஞ்சு சாத்துக்குடி பழத்தோல்களை காயவைத்து, பொடி செய்து திரவம் தயாரிக்க முடியும். இந்த திரவம் வீட்டினை சுத்தப்படுத்த, ஹேண்ட்வாஷாக என பலவகைகளில் பயன்படுத்தலாம். கடலைமாவு, பயத்தம்பருப்பின் மூலம் துணி துவைக்கும் திரவங்களைத் தயாரிக்க முடியும். நுரை வந்தால் தான் பிடிக்கும் என்றால் பூச்சிக்கொட்டையில் உள்ள கொட்டையினை அரைத்து சேர்த்தால் நுரை ததும்ப துணிகளை, வீடுகளை சுத்தப்படுத்த முடியும். இயற்கை வழியில் வாழ்ந்தால் இந்தத் தலைமுறையினர் மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையினருக்கும் இந்த இயற்கை வளங்களை பாதிப்பில்லாமல் கொடுக்க முடியும் என்று கூறினார்.

சிறுதுளி அமைப்பின் அலுவலகம், கோவையில் உள்ள பல பள்ளிகளில் இயற்கையான முறையிலேயே சுத்தப்படுத்துகின்றனர் என தெரிவித்தார். 



மேலும், இந்த நிகழ்ச்சியில் சாம்பல் வைத்து பாத்திரம் கழுவும் பொடி, சலவைத் திரவம், பலவகைகளில் பயன்படுத்த உதவும் பயோ என்சைம் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் முறைகளை கற்றுக் கொடுத்தார். சுமார் 45-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தயாரிப்பு முறைகளைக் கற்றுக் கொண்டும், இனி இயற்கைப் பொருட்களைக் கொண்டே வீடுகளை சுத்தப்படுத்துவோம் என்ற உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனர்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...