திருப்பூர் : மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பத்து கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்துள்ளது.

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தைக் கண்டித்து, அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக இயங்கவில்லை.

இதனால் பத்து கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கியுள்ளது. நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமசாமி தெரிவித்தார்.