சென்னை : அடுத்து 24 மணி நேரத்தில் திருப்பூர், சேலம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், கடந்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் அநேக இடங்களிலும் கனமழையும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் வடதமிழகத்தின் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த மழை நிலவரமானது அடுத்த 2 அல்லது 3 தினங்களுக்கு தமிழக பகுதிகளில் தொடரும் என எச்சரித்தார்.