கோவை : 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு நடக்காது என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது சந்தேகமாக இருப்பதாகவும், இதை மத்திய அரசு சொன்னால் நம்பலாம், மாநில அரசு இதில் எந்தளவு உறுதியாக இருக்கும், என்பது தெரியவில்லை, என திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க அளவீடு பணி செய்ய வந்த அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்திய வழக்கறிஞர் ஈசன், P.R.சண்முகம், முத்துவிஸ்வநாதன், பார்த்தசாரதி, தங்கமுத்து மற்றும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் ஆகியோர் இன்று சிறையில் சந்தித்து ஆதரவினை தெரிவித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுப்புலட்சுமி ஜெகதீசன் உயர் மின் அழுத்த கோபுரங்களை விவசாயிகளின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு அமைக்க கூடாது என தெரிவித்தார்.
"ஏற்கனவே, அமைக்கப்பட்ட உயர் மின் வழித்தடங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாத நிலையில், புதிதாக அமைக்கப்பட இருக்கும் உயர்மின் கோபுரங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை", என அவர் தெரிவித்தார்.
உயர் மின் கோபுரம், கெயில் போன்றவை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் இந்த திட்டங்களுக்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் எழுப்பும், என்றார்.
இந்தியை கொண்டு வந்து உட்கார வைத்து விட்டால் எதிர்ப்பு இருக்கும், ஓட்டு கேட்டு செல்ல முடியாது என்பதால் கர்நாடாகாவில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா இந்தியை எதிர்ப்பதாகவும், அவர் தெரிவித்தார்.