திருப்பூர் : திருப்பூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
3திருப்பூர் : திருப்பூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 500 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் போதிய ஆசிரியர்கள் இல்லை, எனவும் பெற்றோர்கள் பலமுறை மனு அளித்துள்ளனர்.
மேலும், பள்ளியை சுத்தம் செய்ய போதிய பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பள்ளி மாணவ மாணவிகளை கொண்டே சுத்தம் செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர்கள், இதற்கு உடனடி தேர்வு கிடைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் திருப்பூர் தெற்கு தாசில்தார் ஆகியோர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பெற்றோர்களின் கோரிக்கையை விரைந்து சரி செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
இதனால், நாச்சிபாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.