இரயிலில் குப்பைகளை கூடையில் போடுங்கள்; பயணிகளிடம் மாணவர்கள் விழிப்புணர்வு

கோவை : இரயிலில் பயணம் செய்யும் பயணிகள் குப்பை கூடைகளில் குப்பைகளை போடும்படி வலியுறுத்தி, கோவை இரயில் நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர்.

கோவை : இரயிலில் பயணம் செய்யும் பயணிகள் குப்பை கூடைகளில் குப்பைகளை போடும்படி வலியுறுத்தி, கோவை இரயில் நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர்.

இரயில் நிலையங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அதனை முழுமையாக செயல்படுத்த பயணிகளின் முழு ஒத்துழைப்பு அவசியமாகிறது. ஆனால் பயணிகள் பலரும் தற்போதும் இரயில் பெட்டிகளையே குப்பை மேடாக பயன்படுத்தவதை காண முடிகிறது. 



இதனை சீர்படுத்தும் வகையில் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரயில்வே துறையும் மத்திய அரசும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாடு தோறும் மேற்கொண்டு வருகின்றது.



இதன் ஒரு பகுதியாக தென்னக இரயில்வேயின் சேலம் மண்டல இரயில்வே மற்றும் அறம் பவுண்டேசன் தொண்டு நிறுவனம் சார்பில் கோவை இரயில் நிலையத்தில் 150க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 



பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் நாடக நிகழ்ச்சிகள் மூலமாகவும் நடனமாடியும், குப்பைகளை முறையாக குப்பை கூடைகளில் போட வேண்டும் என்பதை வலியுறித்தி பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



தொடர்ந்து, இரயில் நிலையத்தின் நடைமேடைகள், இருப்புப்பாதைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினர். இந்நிகழ்ச்சியில், இரயில் நிலைய மேலாளர் ராஜூ, அறம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், லதா சுந்தரம் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...