கோவை : கோவையில் இரு சக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்த 9 பேரை கைது செய்த போலீசார் அவர்களை அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்த 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

கோவை அடுத்த ஒனாப்பாளையம், ஜெயா நகரை சேர்ந்தவர் சண்முகம் என்பவரின் மகன் சக்திமுருகன் (48). இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 14ம் தேதி நடுஇரவு தடாகம் ரோரு, டாக்டர் அம்பேத்கார் ரோடு சந்திப்பில் இவர் வந்த போது, இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் இருந்தவாறே அவரது கிளை மேலாளருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அபுபக்கர் சித்திக் (19) என்பவர் சக்தி முருகனின் மொபைல்போனை பறித்து தப்பிச் சென்றுள்ளார். அவரை விரட்டி சென்ற சக்தி முருகன் சிலர் உதவியுடன் சற்று தூரம் விரட்டி சென்று அவரை பிடித்து சாமிபாபாகாலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்துள்ளார்.
இப்புகாரை பதிவு செய்து விசாரித்த காவல் ஆய்வாளர் வீரம்மாள், அபுபக்கர் சித்திக் மொபைல் பறிப்பு சம்பவத்தில் மட்டுமல்லாது சிலருடன் கூட்ரு சேர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடி அவற்றை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக காவல் ஆணையர் சுமித்சரண் மற்றும் காவல் துணை ஆணையர் பெருமாள் ஆகியோர் உத்தரவின் பேரில் தீவிர. புலன் விசாரணை மேற்கொண்டதில் அபுபக்கர் சிதீதீக்குடன் 1). அசாருதீன், 2). ஜாபர் 3). அப்பாஸ் 4) சாகுல் ஹமீது 5). பாண்டியராஜன் 6). சுப்பிரமணியன் 7). பழனிவேல் 8). அஜித் ஆகியோர் சம்பந்தப்பட்டது தெரிய வந்தது.
எனவே இவ்வழக்கில் பிரிவுகள்... 892 இ.த.ச 392, 379, 120 B, 34, 109, 411 & 414 இ.த.சட்டத்தின் கீழ் 15ம் தேதி அபுபக்கர் சித்திக் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1), அசாருதீன் (22), த/பெ. சுலைமான் 2). ஜாபர்(32), த/பெ. முகமதுமைதீன், 3). அப்பாஸ்(40), த/பெ. அப்துல் ரகுமான், 4).சாகுல் ஹமீது(42), த/பெ. நூர்முகமது, 5). பாண்டியராஜன் (22),. த/பெ. கணேசன், (6). சுப்பிரமணியன் (31), த/பெ.பழனிவேல், 7).பழனிவேல் (21), த/பெ. ராஜேந்திரன், 8). அஜித் (19), -த/பெ. ராஜா ஆகியோர் 16.09.19 மற்றும் 17.09.19ம் தேதிகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து திருடப்பட்ட 9 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக மாநகர போலீசார் தெரிவிக்கையில், வாகனங்களை திருடுபவர்களை மட்டுமின்றி திருட்டு வாகனங்களை விற்பவர்கள், வாங்குபவர்கள் உடந்தையாக இருப்பவர்கள் ஆகியோர் மீதும் சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.