அரசு அலுவலர்களையும்‌, கடைகோடி கிராமங்களிலுள்ள மக்களையும்‌ இணைக்கும்‌ பாலமாக மனுநீதி நாள்‌ முகாம் : மாவட்ட ஆட்சியர்‌

கோவை : மாவட்ட அளவிலான அரசு அலுவலர்களையும்‌, கடைகோடி கிராமங்களிலுள்ள மக்களையும்‌ இணைக்கும்‌ பாலமாக மனுநீதி நாள்‌ முகாம்கள்‌ அமைவதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை : மாவட்ட அளவிலான அரசு அலுவலர்களையும்‌, கடைகோடி கிராமங்களிலுள்ள மக்களையும்‌ இணைக்கும்‌ பாலமாக மனுநீதி நாள்‌ முகாம்கள்‌ அமைவதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம்‌ வால்பாறை, வட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ இன்று மனுநீதி நாள்‌ முகாம்‌ மாவட்ட ஆட்சியர்‌ இராசாமணி, அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இம்முகாமில்‌ 341 பயனாளிகளுக்கு 14 இலட்சத்து 67 ஆயிரத்து 263 ரூபாய் மதிப்பீட்டில்‌ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌.

பின்னர் இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர்‌ பேசுகையில்‌, தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌, தமிழக மக்களின்‌ நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள்‌ அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால்‌ சிறப்பான முறையில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள்‌ என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம்‌ என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின்‌ நலத்திட்டங்களை பொதுமக்கள்‌ மென்மேலும்‌ தெரிந்து கொள்ளும்‌ வகையில்‌ அனைத்துத்துறை அரசு முதன்மை அலுவலர்களை கொண்டு மக்கள்‌ தொடர்பு முகாம்‌ மாதம்‌ ஒருமுறை மாவட்டத்தில்‌ உள்ள கிராமப்புறங்களில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தலைமையில்‌, அனைத்து துறை உயர்‌ அலுவலர்களைக்‌ கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவிலான அரசு அலுவலர்களையும்‌, கடைகோடி கிராமங்களிலுள்ள மக்களையும்‌ இணைக்கும்‌ பாலமாக மனுநீதி நாள்‌ முகாம்கள்‌ அமைகின்றன. அதன்படி, இன்று வால்பாறையில்‌ மக்கள்‌ தொடர்பு முகாம்‌ நடைபெறுகிறது. மேலும்‌, வால்பாறை வட்டத்தில்‌ பொள்ளாச்சி வருவாய்‌ கோட்டாட்சியய்‌ தலைமையில்‌ மாதத்திற்கு ஒரு முறையும்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தலைமையில்‌ இரண்டு மாதத்திற்கு ஒரு முறையும்‌ இதுபோன்ற மனுநீதி நாள்‌ முகாம்‌ நடைபெறும்‌.

இன்று நடைபெறும்‌ இம்முகாமில்‌ நலத்திட்ட உதவிகள்‌ பெற 15 நாட்களுக்கு முன்னதாக இப்பகுதி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள்‌ பெறப்பட்டு, அவற்றினை பரிசீலனை செய்து அதன்படி, உடனடி நடவடிக்கையாக இம்முகாமில்‌ நலத்திட்ட உதவிகள்‌ வழங்கப்படுகின்றன. அதேபோல்‌ இன்றைய தினம்‌ இம்மனுநீதி முகாமில்‌ பெறப்படும்‌ மனுக்கள்‌ மீதும்‌, தொடர்புடைய அலுவலர்கள்‌ விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழக அரசால்‌ செயல்படுத்தப்படும்‌ அரசு நலத்திட்டங்களைப்‌ பயன்படுத்தி, பயனாளிகள்‌ மென்மேலும்‌ வாழ்க்கையில்‌ முன்னேற்றம்‌ காண வேண்டும்‌.

ஏழை எளிய மற்றும்‌ நடுத்தர மக்கள்‌ தங்கள்‌ வாழ்வில்‌ முன்னேற்றம்‌ காண பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அரசு செயல்படுத்தி வந்தாலும்‌, மாவட்டத்தின்‌ கடைகோடியிலுள்ள மக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, தொலைதூர கிராமங்களில்‌ மக்கள்‌ தொடர்பு முகாம்கள்‌ நடத்தப்படுகின்றது.

தமிழ்நாடு அரசின்‌ மூலம்‌ முதியோர்‌ உதவி தொகை, உழவர்‌ பாதுகாப்பு திட்டத்தின்‌ கீழ்‌ கல்வி உதவி தொகை, திருமண உதவி தொகை, விபத்து நிவாரண தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மகளிர்கள்‌ தங்கள்‌ வாழ்வில்‌ முன்னேற்றம்‌ அடைய வேண்டும்‌ என்ற நோக்கில்‌ தங்கத்துடன்‌ கூடிய திருமண நிதியுதவித்‌ திட்டம்‌, முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித்‌ திட்டம்‌, உழைக்கும்‌ மகளிர்களுக்கு இருசக்கர மோட்டார்‌ வாகனம்‌ வழங்கும்‌ திட்டம்‌ போன்ற எண்ணற்ற வளர்ச்சித்‌ திட்டங்களை செயல்படுத்தப்படுகின்றது.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ முகாம்கள்‌ மூலம்‌ 10,000 மனுக்கள்‌ பெறப்பட்டுள்ளன. அம்மனுக்கள்‌ மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று பொதுமக்களிடமிருந்து 500மேற்பட்ட கோரிக்கை மனுக்கள்‌ பெறப்பட்டுள்ளன. இம்மனுக்கள்‌ மீதும்‌ விரைவான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள சம்மபந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம்‌ சட்டத்திற்குப்‌ புறம்பானது. இச்சட்டத்தை மீறுவது சட்டபடி தண்டனைக்குரிய செயலாகும்‌. எனவே குழந்தை திருமணம்‌ நடத்துவர்கள்‌ மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்‌. குழந்தை திருமணம்‌ குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம்‌ ஏற்படுத்தவேண்டும்‌, பொதுமக்களும்‌ அலுவலர்களுடன்‌ சேர்ந்து குழந்தை திருமணத்தை ஒழித்திட முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்‌. என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்‌.

தொடர்ந்து, இம்முகாமில்‌ முதியோர்‌ மற்றும்‌ இதர உதவித்தொகை 20 பயனாளிகளுக்கு ரூ.2,40,000,/-மதிப்பிலும்‌, இயற்கை மரணம்‌ உதவித்‌ தொகையாக 252 பயனாளிகளுக்கு ரூ.6,30,000,/-மதிப்பிலும்‌, இயற்கை இன்னல்‌ நிவாரணத்‌ தொகை 19 பயனாளிகளுக்கு ரூ.95,000/-மதிப்பிலும்‌, சலவை பெட்டி 9 பயனாளிக்கு, ரூ.45, 117/- மதிப்பிலும்‌, தையல்‌ இயந்திரம்‌ 2 பயனாளிகளுக்கு ரூ.7,146/-மதிப்பிலும்‌, புதிய குடும்ப அட்டை % பயனாளிகளுக்கும்‌, நத்தம்‌ பட்டா மற்றும்‌ சிட்டா அடங்கல்‌ 4 பயனாளிகளுக்கு, இலவச வீட்டுமனை பட்டா 3 பயனாளிகளுக்கு ரூ.4,50,000/- மதிப்பிலும்‌, பழங்குடியினர்‌ சாதிச்சான்று 27 பயனாளிகளுக்கும்‌ என மொத்தம்‌ 341 பயனாளிகளுக்கு ரூ.14,67,263/-மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ வழங்கினார்‌.

இம்முகாமில்‌ வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்‌ கஸ்தூரிவாசு, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன்‌, மாவட்ட வன அலுவலர்‌(பொள்ளாச்சி) மாரிமுத்து, வருவாய்‌ கோட்டாட்சியர்‌(பொள்ளாச்சி) ரவிக்குமார்‌ துணை ஆணையர்‌(கலால்‌)கலைவாணி, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர்‌ மேனகா, தமிழ்நாடு ஊரக வாழ்வதாரம்‌ மகளிர்‌ திட்ட இயக்குநர்‌ செல்வராசு, துணை இயக்குநர்‌(சுகாதாரம்‌) பானுமதி, மாவட்ட சமூக நல அலுவலர்‌ தங்கமணி, மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலர்‌ பிரபாகரன்‌, மாவட்ட வழங்கல்‌ அலுவலர்‌ குமரேசன்‌, வட்டாட்சியர்‌ வெங்கடாச்சலம்‌ உள்ளிட்ட பல்வேறு அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...