பொதுத்தேர்வு நடத்துவதற்கு பதிலாக பள்ளி கட்டிடங்கள், ஆசிரியர்களின்‌ திறன் மேம்படுத்துவதில் கவனம்‌ செலுத்தலாம் : கமல்ஹாசன்‌

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்குப் பதிலாக பள்ளி கட்டிடங்களை மேம்படுத்துவதிலும்‌, ஆசிரியர்களின்‌ திறனை மேம்படுத்துவதிலும்‌ கவனம்‌ செலுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்‌ கூறியுள்ளார்‌.


5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்குப் பதிலாக பள்ளி கட்டிடங்களை மேம்படுத்துவதிலும்‌, ஆசிரியர்களின்‌ திறனை மேம்படுத்துவதிலும்‌ கவனம்‌ செலுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்‌ கூறியுள்ளார்‌.

இதுதொடர்பாக வீடியோ பதிவு ஒன்றினை கமல்ஹாசன்‌ வெளியிட்டுள்ளார்‌. அந்த வீடியோவில்‌, “ஒரு தும்பியுடைய வாலில்‌ பாராங்கல்லை கட்டி பறக்கவிடுவது, எவ்ளோ கொடுமையான விஷயமோ அதை விட கொடுமையானது 10 வயசு பையன்‌ மனதில்‌ பொதுத்‌ தேர்வு எனும்‌ சுமைய கட்டி வைப்பது. இந்தக்‌ கல்வித்‌ திட்டம்‌ நம்ம குழந்தைகளுக்கு எதை சொல்லிக்‌ கொடுக்கிறதோ இல்லையோ மன அழுத்தத்தைக் கண்டிப்பாக சொல்லிக்‌ கொடுக்கும்‌. இந்தத்‌ திட்டத்தால்‌ தேர்வு விகிதம்‌ அதிகமாகாது, குழந்தைகளுக்கும்‌ பெற்றோர்களுக்கும்‌ தேர்வு பயம்தான்‌ அதிகமாகும்‌.

ஜாதிகளாலும்‌ மதங்களினாலும்‌ ஏற்படும்‌ ஏற்றத்தாழ்வுகளை விட மதிப்பெண்களால்‌ ஏற்படப்போகும்‌ ஏற்றத்தாழ்வுகளால்தான்‌ இப்போது பாதிப்பு அதிகமா இருக்கப்போகிறது. இந்தப்‌ பாதிப்பு சமூகத்தில்‌ எதிரொலிக்கும்‌ போது ஒரு குழந்தை இந்தச்‌ சமூகத்தில்‌ வாழ்வதற்கு நமக்கு தகுதியே இல்லையோ என்று தாழ்வு மனப்பான்மைக்குள்‌ மூழ்கிப் போகும்‌. நான்‌ எட்டாவதோடு என்‌ படிப்பை நிறுத்தியதற்கு பல காரணங்கள்‌ உண்டு. ஆனால்‌ இனி எந்த ஒரு குழந்தை படிப்பை நிறுத்தினாலும்‌ அதற்கு நீங்கள்‌ இப்போது அமல்படுத்தியிருக்கும்‌ பொதுத்‌ தேர்வு மட்டும்தான்‌ முக்கியக்‌ காரணமாக இருக்கும்‌.

குழந்தைகளின்‌ எதிர்காலத்திற்கு எள்‌ அளவும்‌ பயன்‌ தராத இந்தப்‌ புதிய கல்வி திட்டத்தை மக்கள்‌ நீதி மய்யம்‌ வன்மையாக கண்டிப்பதுடன்‌, இந்தத்‌ திட்டத்தை உடனடியாக திரும்பப்‌ பெற வலியுறுத்துகிறது. இதற்குப்‌ பதிலாக பள்ளி கட்டிடங்களை மேம்படுத்துவதிலும்‌, ஆசிரியர்களின்‌ திறனை மேம்படுத்துவதிலும்‌ கவனம்‌ நீங்கள்‌ செலுத்தினால்‌ மாற்றம்‌ இனிதாகும்‌. நாளை நமதாகும்‌.” என அவர்‌ பேசியுள்ளார்‌.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...