கோவை : அரசு பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆசிரியர்கள் பெரும் முயற்சி எடுத்து வரும் நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயல் என த.பெ.தி.க பொதுசெயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயம் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற முறை தற்போது அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக எப்படியும் தேர்ச்சி பெறலாம் என்பதால் மாணவர்கள், படிப்பில் முழு கவனத்தையும் செலுத்துவதில்லை என்றும், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு கூறி வந்தது.
அதற்காக இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் மத்திய அரசின் முடிவை மசோதாவாகவும் தாக்கல் செய்தனர். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். இது நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைக் கண்டித்து, அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தலைமை நிலைய செயலாளர் ஆறுச்சாமி,தி.மு.க சார்பில் சித்ரகலா, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, புரட்சிகர இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் மாதவன், வி.சி.கே சார்பில் மண்டல பொறுப்பாளர் சுசி கலையரசன், மாநகர் மாவட்ட தலைவர் இலக்கியன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் அஸ்ரப் அலி, தமிழ் புலிகள் மாநில பொதுச் செயலாளர் இளவேனில், ஆதிதமிழர் பேரவை மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார், மே 17 இயக்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் பத்மநாபன், ஜமாத்த்கே இஸ்லாமிக் இந் மாவட்ட தலைவர் ஹக்கீம், எஸ்.டி.பி.ஐ மாநில பொது செயலாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட தலைவர் ராஜா உசேன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜோதிகுமார், பி.எப்.ஐ மாவட்ட தலைவர் ஷெரீப், த.மு.மு.க மாவட்ட தலைவர் இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், 5ம் வகுப்பு 8ம் வகுப்பு பொதுத் தேர்வை கைவிட வேண்டும், கல்வி கற்பது அடிப்படை உரிமை பொதுத் தேர்வு என்ற பெயரில் கல்வி உரிமையைப் பறிக்காதே, பா.ஜ.க அரசிடம் தமிழ்நாட்டின் கல்வி உரிமையை அடகு வைக்காதே உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், 5ம் வகுப்பு 8ம் தேர்வு திட்டத்தை உடனடியாக நிரந்தரமாக கைவிட வேண்டும் என்றும் நீட்டிற்கு விலக்கு என்று கூறி, உச்சநீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி ஏமாற்றப்பட்டதால் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அவதிப்பட்டு வருவதாக கூறினார்.

5 மற்றும் 8ம் வகுப்பு தகுதி தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்கள் வருகை குறையும் என்றவர், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் பெரும் முயற்சி எடுத்து வரும் நிலையில், இந்த தகுதி தேர்வினால் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைவதோடு மாணவர் கல்வி உரிமையை பறிக்கும் செயல் என்றார்.