மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ; கணக்கில் வராத 3 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கோவை : மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத 3.32 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.

கோவை : மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத 3.32 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தொடர்ந்து ஊழல் மற்றும் லஞ்சம் நடைபெற்று வருவதாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 



இதனையடுத்து, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் அவர்களுடன் இணைந்து பத்திர பதிவுத்துறை ஆய்வுக் குழுவும் இன்று மதியம் திடீரென நுழைந்து ஆய்வு நடத்தியது. லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் தலைமையில் நான்கு பேர் பத்திரப்பதிவு ஆய்வு குழுவினர் நான்கு பேர் என மொத்தம் எட்டு பேர் அதிரடியாக உள்ளே நுழைந்து கதவுகளை அடைத்து ஆய்வு நடத்தியது.

இதில், பத்திரப்பதிவு செய்ய பொதுமக்களிடம் முறைகேடாக வாங்கிய கணக்கில் வராத சுமார் 3.32 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பத்திரப்பதிவு செய்ய பல்வேறு வழிகளில் சார்பதிவாளர் மற்றும் அலுவலர்கள் லஞ்சம் பெற்றது உறுதியானது, இதனையடுத்து 3.32 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார், தொடர்ந்து கோப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு இரவு வரை தொடர வாய்ப்புள்ளது. ஆய்வுக்குப் பின்னரே முறைகேடுகள் குறித்து விசாரணை முடிவடைந்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவித்தனர். 

சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த திடீர் சோதனையால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் வழக்கமான அலுவல் நேரம் வரை பத்திரப்பதிவு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...