காவிரியில் அதிகமாக தண்ணீர் ஓட ஆரம்பித்து விட்டால் தண்ணீர் பிரச்சனையே வராது : ஜக்கி வாசுதேவ்

கோவை : காவிரியில் அதிகமாக தண்ணீர் ஓட ஆரம்பித்து விட்டால், கர்நாடகா-தமிழகம் இடையே தண்ணீர் பிரச்சனையே வராது என ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கிவாசுதேவ் தெரிவித்தார். தமிழக சாலைகள் கலிபோர்னியா நாட்டின் சாலைகள் போல இருப்பதைக் காவிரி கூக்குரல் பயணத்தின் போது உணர முடிந்ததாகவும் ஜக்கிவாசுதேவ் தெரிவித்தார்.


கோவை : காவிரியில் அதிகமாக தண்ணீர் ஓட ஆரம்பித்து விட்டால், கர்நாடகா-தமிழகம் இடையே தண்ணீர் பிரச்சனையே வராது என ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கிவாசுதேவ் தெரிவித்தார். தமிழக சாலைகள் கலிபோர்னியா நாட்டின் சாலைகள் போல இருப்பதைக் காவிரி கூக்குரல் பயணத்தின் போது உணர முடிந்ததாகவும் ஜக்கிவாசுதேவ் தெரிவித்தார்.



காவேரி கூக்குரல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நிறைவு செய்து கோவை திரும்பிய ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்விற்கு கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த பாராட்டு விழா நிகழ்வில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் மற்றும் தொழில் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இதனை தொடர்ந்து விழாவில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், 120 உபநதிகள் இணைந்து காவேரி நதியாக ஓடுகின்றது எனவும் அதில் 35 நதிகள் மட்டுமே ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கின்றது எனவும் மற்றவை மழை காலங்களில் மட்டும் ஓடுகின்றது எனவும் தெரிவித்தார்.

தமிழ் கலாச்சாரம் வளர விவசாயம் காரணம் என கூறிய அவர், இப்போதைய விவசாயினுடைய நிலை அனைவருக்கும் தெரியும் எனவும் 2 சதவீதம் கூட அடுத்த தலைமுறை விவசாயத்திற்குச் செல்ல தயாராக இல்லை எனவும் தெரிவித்தார். பெரும்பாலான அணைகளில் 40 சதவீதம் வண்டல் மண் இருக்கின்றது எனவும் தெரிவித்தார். 



அமைச்சர் என் பக்கத்திலேயே இருப்பதால் அவரை மாண்புமிகு என்று சொல்லவில்லை என கூறிய ஜக்கி வாசுதேவ், கடந்த 100 ஆண்டுகளின் பருவமழை அளவை கணக்கிட்டால் அது குறையவில்லை எனவும் அதை மண்ணில் சேமிப்பதே குறைந்துள்ளது என தெரிவித்தார். ஈஷா யோகா மையத்தை ஒட்டிய வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் உள்ள மரங்கள் அதிகளவு வெட்டப்பட்டது எனவும் அதற்குக் காரணம், அங்கு செயல்பட்டு வந்த வீட்டு மரச்சாமான்கள் தயாரிப்பு நிறுவனங்கள் என கூறிய அவர், அதை நிறுத்துவதற்கு அந்நிறுவனத்தை விலைக்கு வாங்கிவிட்டேன் எனவும் தெரிவித்தார்.

காவிரி டெல்டா பகுதியில் 242 கோடி மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒருவர் 2 மரக்கன்றுகளை நட்டால் போதுமானது எனவும் ஆனால் சில பேர் அதை செய்யமாட்டார்கள் என்பதால் அவர்களுக்கும் சேர்த்தே நாமே நடுவோம் எனவும் தெரிவித்தார்.

காவிரி படுகை விவசாயிகள் 47 ஆயிரம் பேர் கடந்த 12 ஆண்டுகளில் தற்கொலை செய்துள்ளனர் என கூறிய அவர், 242 கோடி மரங்கள் நட்டால் 9.12 டிரில்லியன் நீர் உற்பத்திக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார். இத்திட்டம் சாத்தியமானால் காவிரி நதி, ஆண்டுக்கு 12 மாதங்கள் ஓடும் நிலை ஏற்படும் எனவும் காவிரி வெறும் நீர்நிலை மட்டுமாக பார்க்கவில்லை, அது மிகப்பெரிய பல்லுயிர் வாழ்வைக் கொண்டதாக நான் பார்க்கிறேன் எனவும் தெரிவித்தார். 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள காவிரியில், தற்போது 30% மட்டுமே உள்ளது என கூறியவர், தற்போது காவிரியில் வெறும் மண் மட்டுமே உள்ளது என்றார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜக்கி வாசுதேவ், காவிரி கூக்குரல் பயணத்தின் போது, விவசாயிகள் உற்சாகமாக இருக்கிறார்கள் எனவும் மழையையும் பொருட்படுத்தாமல் குழந்தையை வைத்துக்கொண்டு பெண்கள் நின்று வரவேற்றனர் எனவும் இந்த நிகழ்வில் அந்தளவிற்கு ஈடுபாடு இருந்ததாக தெரிவித்தார். தமிழக சாலைகள் கலிபோர்னியா நாட்டின் சாலைகள் போன்று உள்ளது எனவும் இதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கூறிய அவர், சாலைகள் குறித்து விமர்சனம் செய்வதை விடுத்து நல்லதைச் சொல்வதையும் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 35 ஆண்டுகளுக்கும் முன் சாலைகளில் பயணம் செய்ததற்கும் தற்போது உள்ளதற்கு மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது எனவும் கர்நாடகாவிலும் தமிழகத்திலும் வெளிநாடுகளில் உள்ளது போல் சாலைகள் இருக்கிறது என்றார். இங்கு இருப்பவர்களுக்கு இன்னும் சாலைகளில் வண்டி ஓட்டத்தான் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு மானியம் வழங்க வேண்டும் எனவும் எதை வளர்த்தானாலும் விவசாயி விருப்பத்திற்கு ஏற்ப வளர்க்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்றவர், 5 வழிமுறைகளைத் தமிழகம், கர்நாடக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், விவசாயி விருப்பத்திற்கு ஏற்ப அவர் நிலத்தில் எதையும் வளர்க்கலாம் என்ற சட்டம் கொண்டு வருவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் சில நாட்களில் செய்து தருவதாக உறுதியளித்துள்ளதாகக் கூறிய அவர், கர்நாடக அரசுடன் நாளை பேச உள்ளதாகவும் தமிழக அரசும் ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

மக்கள் மற்றும் அரசு ஒத்துழைப்பு என அவர்களது உற்சாகத்தைப் பார்க்கும்போது 242 கோடி மரக்கன்றுகள் நடுவது சவாலாகத் தோன்றவில்லை என கூறிய அவர், காவிரியில் அதிகமாக தண்ணீர் ஓட ஆரம்பித்து விட்டதால் கர்நாடக-தமிழகம் இடையே பிரச்சனை வராது எனவும் தெரிவித்தார். அடுத்த கட்டமாக கர்நாடக மற்றும் தமிழகத்தில் தனித்தனியாகக் காவிரி டெல்டா பகுதியில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏகளின் கூட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்த அவர், தாலுக்காவில் 250 விவசாயிகளை மர விவசாயத்திற்குக் கொண்டு வந்தால் போதும் மற்ற விவசாயிகளும் இதற்கு மாறிவிடுவார்கள் என ஜக்கிவாசுதேவ் தெரிவித்தார்.



இரு சக்கர வாகனத்தில் விழா மேடைக்கு வந்த ஜக்கிவாசுதேவ், நிகழ்ச்சி முடிந்த பின் விழா மேடையில் இருந்து இரு சக்கர வாகனத்திலேயே கிளம்பிச் சென்றார். முன்னதாக இருசக்கர வாகனத்தில் கொடிசியா வந்த ஜக்கி வாசுதேவ்விற்கு ஏராளமான பொது மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...