நீலகிரியில் 2வது பருவகால மலர் காட்சியை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டாம் கட்ட சீசன் துவங்கியுள்ள நிலையில், அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டரை லட்சம் மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா இரண்டாவது சீசனை துவக்கி வைத்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டாம் கட்ட சீசன் துவங்கியுள்ள நிலையில், அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டரை லட்சம் மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா இரண்டாவது சீசனை துவக்கி வைத்தார்.



உதகை இரண்டாம் சீசனையொட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் காண ஏதுவாக அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் மாடத்தில் பல வண்ண மலர்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 



முதல் பருவ சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற்ற நிலையில், மலர் காட்சியைக் காண முடியாதவர்கள், இரண்டாம் பருவ கால மலர் காட்சியை காண்கின்ற வகையில் நடைபெறும் இக்காட்சி ஒரு மாத காலம் வரை நடைபெறும் என்று மலர் காட்சிப்படுத்தும் பணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா கூறினார்.



இந்த காட்சியில் டேலியா, சால்வியா, இன்கா மேரி கோல்டு, பிரஞ்சு மேரி கோல்டு, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, ஆஸ்டர் உள்ளிட்ட 85 வகையான மலர்கள் 15 ஆயிரம் பூந்தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. 



மேலும் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையான சுமார் 2 1/2 லட்ச மலர் செடிகள் கொண்டு மலர் பாத்திகள் அமைக்கப்பட்டு தற்போது பூத்துக் குலுங்குவதும், பூங்காவின் பரந்த புல்தரை பச்சை கம்பளம் விரித்தார் போன்று காட்சியளிப்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...