கோவையில் தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

கோவை : விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைப்பதைக் கண்டித்து கோவையில் 1885 தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த 34 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை : விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைப்பதைக் கண்டித்து கோவையில் 1885 தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த 34 பேர் கைது செய்யப்பட்டனர்.



மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் முயற்சிகள் ஈடுபட்டு உள்ளது. இதற்குத் தமிழகம் முழுவதும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

நகல் எரிப்பு போராட்டத்தில் நகலை எரிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் அதனைக் கிழித்து எரிந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த நகல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



இது குறித்து விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பினர் கூறுகையில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட காலாவதியான சட்டத்தை வைத்துக் கொண்டு மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினர். விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதைத் தவிர்த்து கேரளா மாநிலத்தைப் போல் புதை வழித்தடம் மூலமாக கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்க நிர்வாகிகளைப் பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.



இதேபோல, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் 1885ம் ஆண்டு தந்தி சட்டத்தைக் கைவிட்டு விவசாயிகள் நலன் காக்கும் புதிய சட்டத்தைக் கொண்டு வர வலியுறுத்தியும் முன்னதாக செயல்படும் உயர்மின் கோபுர திட்டங்களுக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.



புதிதாக செயல்படுத்தும் திட்டங்களை புதைவட கேபிள் மூலமாகச் செயல்படுத்த வேண்டும், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர் விவசாயிகள் 1885 ஆம் ஆண்டு தந்தி சட்டத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...