கோவை : 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை கண்டித்து கோவை டாடாபாத் அருகே திமுகவினர் நா.கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. அதை மற்ற மாநில அரசுகள் செயல்படுத்தாத நிலையில், தமிழக அரசு உடனடியாக அதை அமல்படுத்தும் நடவடிக்கையாக பொதுத்தேர்வு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தது. இது தமிழக மக்கள் மாணவர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து பல ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களைப் பலரும் நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று திமுகவினர் கோவையில் எம்.எல்.ஏ நா.கார்த்திக் தலைமையில் டாடாபாத் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், குழந்தைகளைச் சித்திரவதை செய்யாதே என்றும் பொதுத் தேர்வை ரத்து செய் என்றும் மாணவர்கள் நலனில் விளையாடாதே என்றும் முழக்கமிட்டனர்.
இந்த பொதுத் தேர்வை உடனடியாக ரத்து செய்யாவிட்டால் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்களை ஒன்றிணைத்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.