கோவை கரும்புக்கடை அருகே பல்வலியால் பாதிக்கப்பட்ட நபர் மருந்தகத்தில் வாங்கிய மாத்திரையில் இரும்பு கம்பி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவை : கோவை கரும்புகடை பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (24). இவர் கார் சீட்டு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.


கோவை : கோவை கரும்புகடை பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (24). இவர் கார் சீட்டு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.



முஸ்தபா கடந்த சில நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். இப்படி இருக்க இன்று காலை கரும்புக்கடை பகுதியில் உள்ள செல்வம் மருந்தகத்தில் ( ofloxacin )மாத்திரை வாங்கியுள்ளார்.



இதையடுத்து அவர் வீட்டிற்குச் சென்று மாத்திரையை உடைத்து உண்ண முற்ப்பட்டார். அப்போது மாத்திரைக்குள் சிறிய இரும்பு கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து முஸ்தபா உடனடியாக மாத்திரையை எடுத்துக்கொண்டு செல்வம் மருந்து கடையில் முறையிட்டார். 

இதைத்தொடர்ந்து மாத்திரை வாங்கியதில் ஏற்பட்ட சேவை குறைபாடு தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முறையாக புகார் அளிக்க இருப்பதாகவும் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட முஸ்தபா கூறும்போது ;- 

சாதாரண பல் வலிக்காக வாங்கிய மாத்திரையில் இரும்பு கம்பி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபோன்று அலட்சியங்கள் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

ஆகவே இந்த மருந்து நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...