கோவை : காவிரி கூக்குரல் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இருந்து வரும் தண்ணீர் பகிர்வது தொடர்பான சண்டை கூட நின்று போகலாம் கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோவை : காவிரி கூக்குரல் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இருந்து வரும் தண்ணீர் பகிர்வது தொடர்பான சண்டை கூட நின்று போகலாம் கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காவிரி கூக்குரல் நிறைவு விழா நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஜக்கி வாசுதேவிற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், காவிரியை மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பது தான் ஜக்கிவாசுதேவின் எண்ணம் எனவும் எதிர் காலத்தில் தண்ணீர் பஞ்சம் தீர்க்க சத்குருவுடன் இணைந்து அனைவரும் பயணிக்க வேண்டும் என்றார்.

சத்குரு ஜக்கி வாசுதேவின் இந்த காவிரி கூக்குரல் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இருந்து வரும் தண்ணீர் பகிர்வது தொடர்பான சண்டை கூட நின்று போகலாம். ஏனெனில் இத்திட்டத்தை கர்நாடகா, தமிழக அரசுகள் ஆதரவளித்துள்ளது எனவும் தமிழக முதல்வர் இந்த திட்டத்திற்கு உதவுவதாக தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது எனவும் தமிழகத்தில் நடப்பட்ட மரங்கள் எல்லாம் வளர்ந்து இருந்தால் மக்களை விட அதிகமாக மரங்கள் வளர்ந்து இருந்திருக்க வேண்டும் என்றார்.
மேலும், ஊடுபயிர் மூலம் விவசாயிகள் மரங்கள் வளர்த்தால், அது அவர்களின் அடுத்த தலைமுறைக்குச் சோறு போடும் என்று கூறிய அவர், தமிழக அரசு மரம் வளர்க்க எல்லா ஊரின் கழிவு நீரையும் சுத்திகரித்து வழங்கினால் அனைத்து மரங்களை வளர்க்க முடியும் என்றார். இந்த திட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் சத்குரு ஜக்கி வாசுதேவ் தமிழக அரசுக்கு உதவுவதாகவும் மக்களும் தமிழக அரசும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மரம் வளர்க்கும் இந்த திட்டத்தை, விவசாயிகள் ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்று தெரிவித்த ஈஸ்வரன், இந்த திட்டத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கொண்டு செல்லும் பணியில் கொ.ம.தே.க. ஈடுபடும் என்றார்.