கோவை : கோவை மாநகராட்சி பகுதிகளில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மத்திய அமைச்சக துணைச்செயலாளர் சர்பேஸ்வர் மஜி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி, ஜி.வி.குடியிருப்பு பகுதியில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் மியாவாக்கி முறையில் மரங்கள் நடும் பணிகளையும், பீளமேடு பகுதியிலுள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினையும் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதை மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மத்திய அமைச்சக துணைச் செயலாளர் சர்பேஸ்வர் மஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், சிங்காநல்லூர் குளம், வெள்ளலூர் குளம், குறிச்சி குளம் ஆகியவற்றில் நீர்நிலைகளின் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர்கள் சுந்தாராஜன், பிரபாகரன், ஜான்சன் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.