காவேரி கூக்குரல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நிறைவு செய்து கோவை திரும்பினார் ஜக்கி வாசுதேவ்

கோவை : காவேரி கூக்குரல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நிறைவு செய்து கோவை திரும்பிய ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்விற்கு கோவையில் மேளதாளம் முழங்க, நடனமாடி மாணவர்களும், ஈஷா மையத்தை சேர்ந்தவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை : காவேரி கூக்குரல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நிறைவு செய்து கோவை திரும்பிய ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்விற்கு கோவையில் மேளதாளம் முழங்க, நடனமாடி மாணவர்களும், ஈஷா மையத்தை சேர்ந்தவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 



இதனை தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழாவில் ஜக்கிவாசுதேவ் கலந்து கொண்டுள்ளார்.



காவேரி நதிக்கு புத்துயிரூட்ட, காவேரி கூக்குரல் இயக்கத்தை ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடந்த 3ம் தேதி துவங்கினார். கர்நாடக மாநிலம் தலைகாவேரியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னை வரை 28 மாவட்டங்களில் சுமார் 3500 கிலோ மீட்டர், இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட ஜக்கிவாசுதேவ், தனது பயணத்தை சென்னையில் கடந்த 15ம் தேதி நிறைவு செய்தார்.



இரு சக்கர வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட ஜக்கி வாசுதேவ், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை மேம்படுத்தவும், காவிரி டெல்டா மாவட்டங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த காவேரி கூக்குரல் நிகழ்ச்சிக்கு ஆளுநர்கள்,அரசியல், சினிமா பிரபலங்கள் தொழில் அமைப்பினர் என பல தரப்பட்ட மக்களும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை நிறைவு செய்த பின் ஜக்கி வாசுதேவ் இன்று கோவை திரும்பினார்.



கோவை திரும்பிய ஜக்கிவாசுதேவிற்கு கொடிசியா வளாகத்தில் 30 தொழில் அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. 



இந்த விழாவில் கலந்து கொள்ள இரு சக்கர வாகனத்தில் பேரணியாக வந்த ஜக்கி வாசுதேவ்விற்கு கொடிசியா சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான கல்லூரி மாணவர்களும்,பொது மக்களும், ஈஷா மையத்தை சேர்ந்தவர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.



கொடிசியா வளாகத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் மேள தாளங்களுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடி விழிப்புணர்வு பிரச்சாரத்தை நிறைவு செய்யும் ஜக்கி வாசுதேவ்விற்கு வரவேற்பளித்தனர். 



இந்த நிகழ்வில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஏராளமான தொழில் அமைப்புகளை சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...