திருப்பூர் : திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னனியினரை கண்டித்து திமுக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னனியினரை கண்டித்து திமுக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து முன்னணி சார்பில் கடந்த 5ம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது, திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் விநாயகர் சிலையுடன் அத்துமீறி புகுந்த இந்து முன்னணியினர் சிலர், நன்கொடை தராத காரணத்தால் பின்னலாடை நிறுவனத்தை அடித்து நொறுக்கியும் அங்கு பணி செய்த ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் இந்த முன்னணியினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்து முன்னணியின் இத்தகைய செயலை கண்டித்தும் இத்தகைய செயலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருப்பூர் மாநகராட்சி முன்பு திமுக காங்கிரஸ் மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களை கைது செய்ய போலீசார் முற்பட்டபோது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் கைது செய்யாமல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.