தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் காலாண்டு தேர்வின் வினாத்தாள்கள் முன்னரே "ஷேர் சாட்" ஆப்களில் வெளியாவது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.

தமிழகத்தில் 2019 ம் ஆண்டிற்க்கான 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்த காலாண்டுத் தேர்வானது இந்த மாதம் 12-ஆம் தேதி துவங்கப்பட்டது. இவை வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த தேர்வுகளானது 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை வேளையும், 11- ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வுகள் அனைத்தும் இரண்டரை மணி நேர தேர்வாக நடைபெற்று வருகிறது.

சமூக வளைதளங்களில் வெளியாகும் வினாத்தாள்கள் ; முந்தைய காலங்களில் வினாத்தாள்கள் வெளியாவது என்பது மிக அரிது.
ஆனால் இன்றைய காலகட்டங்களில் வினாத்தாள்கள் மிக எளிதாக வெளியாகிறது.

இந்த வினாத்தாள்கள் ஒரு சில விஷமிகள் மூலம் வாட்ஸ் அப், ஷேர் சாட் போன்ற செயலிகளில் மாணவர்கள் மத்தியில் பரப்பபடுகிறது.
இது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதுடன் அவர்களின் மனநிலையை குற்ற செயலுக்கு ஊக்கபடுத்துகிறது என மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்திரவேல் கூறும்போது ;-

தேர்வுக்கு முன்னே வினாத்தாள்கள் வெளியாவதும் அதை மாணவர்கள் தயார் செய்து தேர்வு எழுதுவதும், மாணவர்கள் மத்தியில் நியாயமாக முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தை தகற்கிறது.இது மாணவர்களை குறுக்கு வழியில் செல்ல வழி வகுக்கிறது.
அதேபோல தேர்வு வினாத்தாள்கள் வெளியாவது குறித்த எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் தேவையற்ற மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.
அதேபோல வெளியான வினாத்தாள்கள் மூலம் வெற்றி பெற்றுவிட்டால் மீண்டும் வினாத்தாள்களை தேடும் எதிர்பார்ப்பே உருவாகிறது.
இது மாணவ சமுதாயத்தை சீர் குலைக்கும் செயல்.
ஆகவே வினாத்தாள்கள் முன்னரே வெளியாக காரணமாயிருக்கும் ஆஃப்க்கள் மீதும், வினாத்தாள்களை வெளியிடும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என தெரிவித்தார்.
2019 ம் ஆண்டிற்கான காலாண்டு தேர்வும் வினாத்தாளை வெளியிட்ட செயலியும் ;
2019 ஆம் ஆண்டிற்கான காலாண்டு தேர்வு துவங்கியதிலிருந்து வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே ஷேர் சாட் செயலிகளில் பரப்பப்பட்டு வருகிறது.
குறிப்பாக நேற்று நடைபெற்ற 11-ம் வகுப்புக்கான வணிகவியல் தேர்வின் வினாத்தாள் நேற்று முன் தினமே ஷேர் சாட் செயலியில் வெளியானது.
இதை கண்ட மாணவர்கள் அந்த வினாத்தாளை பதிவிறக்கம் செய்து அனைத்து சக மாணவர்களுக்கும் வாட்ஸப் குழுக்களில் அனுப்பியுள்ளனர்.
இதை மட்டுமே நம்பி படித்து சென்ற மாணவர்கள் நேற்று அதே வினாத்தாள் வெளியானதையடுத்து மகிழ்சியில் அடுத்த தேர்வுக்கும் ஷேர் சாட் செயலியை எதிர்பார்த்து செல்போனை தேடியபடி தங்களின் நேரத்தை வீணடிக்கின்றனர்.
ஆனால் நேற்று செயலியை நம்பி வினாத்தாளை தேடிக்கொண்டிருந்த மாணவர்களுக்கு தற்போதுவரை வினாத்தாள் வெளியாகாதது ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
அதேபோல விஷமிகளால் ஒரு சில நேரங்களில் போலியாகவும் வினாத்தாள் வெளியாக்கபடுகிறது.
இப்படியிருக்க இந்த வினாத்தாள் தான் வரும் என அதை மட்டுமே படித்து சென்ற மாணவர்கள் தேர்வில் படுதோல்வியைம் அடைகின்றனர்.
இதுகுறித்து தனியார் பள்ளியின் ஆசிரியர் பிரசாத் கூறும்போது ;

மாணவர் சமுதாயத்தை கெடுக்கும் தவறான செயலிகளால் மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட செயலியில் வெளியாகும் வினாத்தாளுக்காக அந்த வினாத்தாளை அனுப்பும் நபர்களுக்கு அடிமையாக கூடும் சூழல் உள்ளது.
அதேபோல அந்த வினாத்தாளை அனுப்பும் நபரின் சமூக விரோத செயலுக்கு குறிப்பிட்ட மாணவரும் ஒத்துழைத்து சில தவறான தூண்டுதல்களுக்கு உடன்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
மேலும் படித்து முன்னேற வேண்டும் என்ற சிந்தனையை மட்டுப்படுத்தி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற தவறான நோக்கத்தை மாணவர்களின் சிந்தனையில் இந்த வினாத்தாள் வெளியீடுகள் உருவாக்கும்.
ஒரு ஆசிரியராக வினாத்தாள்கள் தேர்வுக்கு முன் வெளிவருவதை தவறான முன்னுதாரணமாக நான் பார்க்கிறேன்.
அதேபோல மாணவர்கள் வினாத்தாள் தேர்வுக்கு முன்னே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் படிக்கும் திறனை இழக்கின்றனர்.
இந்த நடவடிக்கைகள் மதிப்பெண் சார்ந்த விஷயம் கிடையாது. இது வாழ்க்கை சார்ந்த விஷயம்.
பயமறியாத இளம் கன்றுகளான மாணவர் சமூகம் நல்ல விஷயங்களுக்காக தங்களின் துணிவை வெளிப்படுத்த வேண்டும்.
அதேபோல தவறான முறையில் அதிக மதிப்பெண் எடுப்பதைவிட நியாயமான முறையில் குறைந்த மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவது தனிமனிதனின் வெற்றியாக பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.
"முயற்சி திருவினையாகும்" "கடின உழைப்பு வெற்றி தரும்" என பல வாசகங்கள் மாணவர் சமுதாயத்திற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலதரப்பட்ட நபர்களால் அறிவுரையாக வழங்கப்படுகிறது.
இந்த அறிவுரையின்படி மாணவ சமுதாயத்தினர் பலர் தங்களின் உழைப்பினாலும் நல்ல முயற்சியினாலும் பல உயர்ந்த இடங்களில் சிகரம் தொட்டுள்ளனர்.
இப்படி வளர்ந்து வரும் மாணவர் சமுதாயத்தை, திட்டமிட்டு சில விஷமிகள் நல்லது செய்வது போல் நவீன முறையில் கெடுத்து வருகின்றனர்.
ஆகவே மாணவர் சமுதாயத்தை சீர்குலைக்கும் நோக்கில் தவறான பாதைக்கு கொண்டு செல்லும் எந்த ஒரு நவீன அறிவியல் செயல்பாடுகளாக இருந்தாலும் அதை அரசு கண்காணித்து கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் தொடரும் விஷமிகளின் செயல்கள் தடுக்கப்படும் என்பதே நிதர்சனம்.