கோவை : 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த தமிழக அரசின் அறிவிப்பைக் கண்டித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட இரு வேறு அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பைக் கண்டித்தும் திரும்பப் பெற கோரியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற அமைப்பினர், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு அறிவிப்பதன் மூலம் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் எனவும், இது தனியார் பள்ளியை ஊக்குவிக்கும் முயற்சி என்றும் முழக்கமிட்டனர். இதனையடுத்து, முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதே போல, தமிழக அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டகேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 30 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.