கோவை : கோவையில் பணத்திற்காக கடத்தியவரை மேட்டுப்பாளையத்தில் வைத்து கொலை செய்து புதைத்த 14 பேர் கொண்ட கொலை கும்பலில் 3 பேர் கைது. புதைக்கப்பட்ட சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, மருத்துவ பிரேத பரிசோதனைக்குப் பின் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.

கோவை கா.க சாவடியைச் சேர்ந்த மாரிமுத்து, இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் குடும்பத்தகராறு ஏற்பட்டு, அவரது மனைவி இவரைவிட்டுப் பிரிந்து சென்ற நிலையில் மாரியப்பன் அவரது தாயுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து மாரிமுத்து அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறி மாதக் கணக்கில் வெளியே இருந்து விட்டு பின்னர் அவ்வப்போது வீட்டிற்கு வருவார் என்றும் சிலரிடம் கூட்டு சேர்ந்து பல்வேறு ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அதுவரை கூலிக்கு வேலைக்கு சென்று வந்த மாரிமுத்து, பின்னர் கார், பைக் என ஆடம்பர வாழ்க்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட ஒரு கும்பல், மாரிமுத்து கடத்த திட்டமிட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நாச்சிப்பாளையம் பகுதியில் வைத்து பணம் பறிக்கும் நோக்கில் ஈடுபட்டுள்ளது. பின்னர், கோவில்பாளையம் அருகே கொண்டு சென்று மாரிமுத்துவை தாக்கிய அந்த கும்பல், அங்கு வலியால் மாரி முத்து கூச்சலிடவே அக்கம் பக்கத்தினருக்குத் தெரிந்துவிடக் கூடாது என மேட்டுப்பாளையம் அருகே உள்ள குமரன் குன்று அருகே உள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். அதற்கு அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரும் உதவியுள்ளார்.
இந்த நிலையில், அங்கு வைத்து மாரிமுத்துவை பணம் கேட்டு அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது, இந்த தாக்குதலில் மாரிமுத்து உயிரிழந்துவிடவே, அவரது உடலை அங்கே உள்ள காட்டுப் பகுதியில் குழி தொண்டி புதைத்துள்ளனர். பின்னர் தனது மகன் வீட்டிற்கு ஆறு மாதமாகியும் வராத நிலையில், மகனை காணவில்லை என அவரது தாய் கருப்பம்மாள் கா.கா சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனிடையே கோவையில் கடந்த வாரம் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், மாரிமுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிவந்தது. இதனையடுத்து இந்த கொலை சம்பவத்தில் 14 பேர் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, இது சம்பந்தமாக சுந்தர் ராஜன், பழனி என்கின்ற பழனிவேல், ஈஸ்வரன் ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் மாரிமுத்து கொலை செய்து புதைக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, புதைக்கப்பட்ட சடலத்தை இன்று குற்றவாளிகள் அடையாளம் காட்டப்பட்டதைத் தொடர்ந்து குமரன் குன்று அருகே அன்னூர் வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு அரசு மருத்துவர்களை கொண்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் தடயங்களை சேகரித்த போலீசார், மருத்துவ பிரேத பரிசோதனைக்குப் பின் அதன் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் உள்ள 11 பேரை பிடிக்க கோவை மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.