ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கால்நடை பல்கலைக் கழக ஆய்வின் அடிப்படையில் சேலம் கால்நடை பூங்கா : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர் : ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் உள்ள கால்நடை பல்கலைக் கழகங்களில் ஆய்வு செய்தவற்றைச் சேலத்தில் அமைய உள்ள கால்நடை பூங்காவில் செயல்படுத்த இருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர் : ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் உள்ள கால்நடை பல்கலைக் கழகங்களில் ஆய்வு செய்தவற்றைச் சேலத்தில் அமைய உள்ள கால்நடை பூங்காவில் செயல்படுத்த இருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைப்பேசி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு கைப்பேசிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் உள்ள கால்நடை பல்கலைக்கழகத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் புரோட்டின் அதிகமிக்க பால் உற்பத்தி செய்யும் நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ததாகவும், அவற்றை சேலத்தில் அமைய உள்ள கால்நடை பூங்காவில் செயல்படுத்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா சேர்ந்த பல்கலைக்கழகங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இதுகுறித்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்ய இருப்பதாக கூறினார்.

அதே போல், தமிழகத்தின் கால்நடை பல்கலைக் கழகங்களில் பயின்று வரும் மாணவ, மாணவிகளும் அங்கு சென்று ஆய்வு மேற்கொள்வர் என்று தெரிவித்த அவர், சிட்னியில் உள்ள கால்நடை பல்கலைக்கழகம் தமிழகத்தில் ஆராய்ச்சி மையம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அதற்காக இரண்டு கோடி ரூபாய் அவர்கள் செலவு செய்யவும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.



மேலும், கேபிள் ஆபரேட்டர்கள் தமிழகம் முழுவதும் கேபிள் கட்டணத்தை உயர்த்தி தர கோரிக்கை வைப்பது குறித்து கேள்வி கேட்டபோது, தமிழகத்தில் 21,000 கேபிள் ஆபரேட்டர்கள் தமிழக அரசின் சிக்னலை பெற்று அரசு கேபிளை வழங்கி வருவதாகவும், 6000 கேபிள் ஆபரேட்டர்கள் தனியார் நிறுவனங்களின் சிக்னலை பெற்று தனியார் கேபிள் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். அதனால் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கொடுப்பதை அரசு செயல்படுத்த விரும்புவதாகவும் இதில் மாற்றுக் கருத்து இல்லை என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...