திருப்பூர் : திருப்பூர் கலப்பட நெய் தயாரித்த 7 வீடுகளுக்கு சீல்.வைத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 500 லிட்டர் பறிமுதல் செய்தனர்.

திருப்பூரில் கலப்பட நெய் தயாரித்து பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.வி.இ லே அவுட் பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள வீடுகளில் பல ஆண்டுகளாக வெண்ணெய் இல்லாமல் டால்டா மற்றும் பாமாயில் கலந்து போலியாக கலப்பட நெய் தயாரித்து குடிசை தொழிலாக செய்து வந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து, அப்பகுதியில் கலப்பட நெய் தயாரித்து விற்பனை செய்துவந்த 7 வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தார். மேலும், அங்கிருந்த 500 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்தனர். மேலும், கலப்பட நெய் தயாரித்து பேக்கரிக்கள், ஓட்டல்கள் மற்றும் கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.