கோவை : பொது இடங்களில் முறைகேடாக வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் பாதை அமைப்பினர் மனு அளித்தனர்.
கோவை : பொது இடங்களில் முறைகேடாக வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் பாதை அமைப்பினர் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பொது இடங்களில் முறைகேடாக வைக்கப்பட்டு உள்ள கொடி கம்பங்களை அகற்ற வலியுறுத்தி மக்கள் பாதை அமைப்பினர் மனு அளித்தனர்.
பின்னர் இது குறித்து அவர்கள் பேசுகையில், அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து விளம்பர பதாகைகள் வைக்கப்படுவது வாடிக்கை ஆகிவிட்டது எனவும் விதிமுறைகளைப் பின்பற்றாமல் அனுமதியின்றி வைக்கப்படும் தற்காலிக மற்றும் நிரந்தர பதாகைகள் வைப்பவர்கள் மீது பெயரளவிற்கு வழக்குப்பதிவுகள் செய்யபடுவதாக தெரிவித்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை செயல்படுத்துவதாக அவசர கதியில் கோவையில் பதாகைகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் ஆனால் அவற்றை நிறுவ அமைக்கப்பட்ட இரும்பு கம்பங்கள் அகற்றப் படாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.
மேலும், கடந்த காலத்தில் காந்திபுரம் பகுதியில் கொடி கம்பம், மின்சார ஒயரில் சாய்ந்து உயிரிழப்பு ஏற்பட்டது போல, மற்றொரு சம்பவம் நடக்காமல் இருக்க பொது இடங்களில் முறையான அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்றிட மாவட்ட நிர்வாகம் முன்வந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.