இராணுவம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு டயனமிக் இந்தியன் ஆப் மில்லினியம் விருது

கோவை : மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இராணுவம், மருத்துவம், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கே.ஜி.பவுண்டேஷன் சார்பில் டயனமிக் இந்தியன் ஆப் மில்லினியம் என்ற விருது வழங்கப்பட்டது.


கோவை : மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இராணுவம், மருத்துவம், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கே.ஜி.பவுண்டேஷன் சார்பில் டயனமிக் இந்தியன் ஆப் மில்லினியம் என்ற விருது வழங்கப்பட்டது.



கோவை கே.ஜி.பவுண்டேஷன் சார்பாக மருத்துவத் துறை, நாட்டின் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஒன்பது பேரை தேர்வு செய்து டயனமிக் இந்தியன் ஆப் தி மில்லினேயம் எனும் விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். வளாகத்தில் நடைபெற்றது. கே.ஜி.பவுண்டேஷன் தலைவர் மருத்துவர் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்ற விழாவில், வராஹி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ வராஹி குருஜி மற்றும் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இதில் டயனமிக் இந்தியன் ஆப் தீ மில்லினேயம் விருது பால் தினகரன், இந்திய புள்ளியியல் நிறுவனத் தலைவர் பேராசிரியர் ராஜகோபால், மிருதுபாஷினி, மாதவன் அழகர்சாமி, எஸ்.கணபதி ரமணன் ,ஜி.மனோஜ் மத்வானி, பி.துர்கா பிரசாத் ரெட்டி, அல்போன்ஸ் மரியதாஸ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.



இதனைத்தொடர்ந்து, 81 மருத்துவர்களுக்கு "டாக்டர் ஆப் எக்ஸ்லென்ஸ்" விருதினையும், நாட்டின் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை, விரைவு அதிரடிப்படை, எல்லை பாதுகாப்பு படை, கப்பற்படை, இராணுவம், விமானப்படை ஆகியவற்றில் பணி செய்வோர்க்கு "இந்தியாவின் நாட்டுப்பற்று மிக்க ஹீரோக்கள்" விருதுகளையும் டாக்டர் பக்தவத்சலம் வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் கே.ஜி.ஐஸ்.எல்.தலைவர் அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...