கோவை : 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதைக் கண்டித்து, கோவை அரசு கலை கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை : 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதைக் கண்டித்து, கோவை அரசு கலை கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஐந்து மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த தேர்வுகளைத் திரும்ப பெறக்கோரி, பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலை கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பத்து வயது குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது ஏற்புடையது அல்ல எனவும், இத்தேர்வுகள் மாணவர்கள் இடைநிறுத்தல்களை அதிகரிக்கும் எனவும் மாணவர்கள் தெரிவித்தனர். இத்தேர்வுகளைத் திரும்ப பெற வேண்டும் எனவும், அதுவரை தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.