குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் தர்ணா

உதகை அருகே கேத்தி பாலாடா பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

உதகை அருகே கேத்தி பாலாடா பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது



கேத்தி பாலாடா பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நடை பாதை, வசதி மயான வசதி, தண்ணீர் வசதி, என அடிப்படைத் தேவைகள் எதுவும் சரியான முறையில் கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர் .

பின்னர், மாவட்ட ஆட்சியரை பார்க்க ஊர் பொதுமக்கள் சார்பாக 3 பேர் சந்திக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்த போது, ஊர் பொதுமக்கள் அனைவரும் ஆட்சியரை சந்தித்தே ஆகவேண்டும் என காவல் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

மேலும், தங்கள் குடியிருக்கும் பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களை தூக்கிச் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது எனவும் அவசர காலத்தில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு கூட சரியான நடைபாதை இல்லை தற்பொழுது தங்களுக்குத் தேவையான முக்கியமான ஒன்று இது என தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் அவர்கள், உங்கள் பகுதியில் அடிப்படைத் தேவைகள் ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் முதற்கட்டமாக நடைபாதையை அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சியரை ஊர் சார்பாக சந்தித்த நபர்கள், சரியான தீர்வு தங்களுக்கு கிடைக்கவில்லை எனில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படைத் தேவைகளுக்காக 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...