கோவை : கோட்சே பற்றி நடிகர் சூர்யா கூறிய கருத்தில் தவறில்லை என்றும் சூர்யாவின் கருத்தை வரவேற்பதாக சி பி எம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க அளவீடு பணி செய்ய வந்த அதிகாரிகளைக் கண்டித்து போராட்டம் நடத்திய வழக்கறிஞர் ஈசன், P.R. சண்முகம், முத்து விஸ்வநாதன், பார்த்தசாரதி, தங்கமுத்து ஆகிய உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் சிறையில் சந்தித்து ஆதரவினை தெரிவித்தனர். பின்னர் சிறை வாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பேசிய அவர், தமிழக அரசு 30க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் மின்கோபுரம் அமைக்க முயன்று வருகிறது எனவும் விவசாயிகள் அனுமதியின்றி அவர்களின் நிலத்தில் புகுந்து அளவீடு செய்வதாகவும் குற்றம்சாட்டினார். திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் விவசாயிகள் நிலத்தில் மின் கோபுரம் அமைக்க அளவீடு செய்யும் பணியை தட்டிக்கேட்ட விவசாயிகள் ஐந்து பேரை பேச்சுவார்த்தை என கூறி அழைத்து வந்து கைது செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்த அவர்,.அரசின் இந்த நடவடிக்கை ஒரு பழிவாங்கும் முயற்சி என்றும் திட்டத்தை மாற்று வழியில் கொண்டு செல்ல விவசாயிகள் வலியுறுத்தும் போது, அதனை பேச்சுவார்த்தை மூலம் அணுகாமல் கைது நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல என்றார்.
மேலும், வரும் 18ம் தேதி விளை நிலங்களில் மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து சட்ட எரிப்பு போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர் எனவும் அந்த போராட்டத்திற்கு சி பி எம் கட்சி ஆதரவளிக்கும் எனவும் தெரிவித்தார்.
அதேபோல, 5 மற்றும் 8ம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்துவது கண்டனத்துக்குரியது என்றும் அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்த அவர், கோவையில் நீதிமன்ற உத்தரவு என கூறி வீட்டு வரிகளை உயர்த்தி இருப்பதாகவும் ஆனால் தீர்ப்பில் அப்படி எதுவுமே இல்லை என்றார். வீட்டுவரி உயர்வு, சூயஸ் நிறுவனத்திற்குக் குடிநீர் விநியோக அனுமதி ஆகியவற்றை கண்டித்து கோவையில் வரும் 27ம் தேதி அனைத்து அரசியல் இயக்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் முழு கடையடைப்பு போராட்டத்தில் சி பி எம் கட்சி முழுமனதோடு பங்கேற்கும் எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் உயர்நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் இயற்கை சூழலை பாதுகாப்பது வரவேற்கத்தக்கது எனவும் காவிரி கூக்குரல் நிகழ்ச்சி நடத்தும் ஜக்கிவாசுதேவை விரும்புபவர்கள் அவரின் திட்டத்திற்கு ஆதரவளிக்கட்டும் என கூறிய அவர், இந்த திட்டத்திற்கு அரசு ஆதரவளிக்க வேண்டியதும் நிதி உதவி செய்ய வேண்டியது அவசியம் என்ன ? என கேள்வி எழுப்பினார். இந்த திட்டத்திற்கு மரக்கன்றுக்கு 42 ரூபாய் வசூல் செய்யப்படுகின்றது எனவும் நாளை அந்த திட்டத்தில் தவறு நடந்தால் தமிழக அரசு பொறுப்பேற்குமா? என்று கேள்வி எழுப்பினார். அரசு தன்னுடைய வனத்துறை, தோட்டக்கலை துறை மூலம் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தலாமே தவிர தனியார் நடத்தும் இது போன்ற நிகழ்வுகளுக்கு ஆதரவு கொடுப்பது சரியல்ல எனவும், இதே போல மற்ற தனியார் நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்க அரசால் முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், நடிகர் சூர்யா திரைப்பட விழா ஒன்றில் கோட்சே பற்றி கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை எனவும் இது தொடர்பாக வலது சாரிகள் கூறும் கருத்தைப் பொருட்படுத்த தேவையில்லை எனவும் நடிகர் சூர்யாவின் கருத்தை தாங்கள் வரவேற்பதாக சி பி எம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.