நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை அரைக்கும் இயந்திரம் அமைக்கும் திட்டம், சுற்றுலா பயணிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 1 முதல் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களுக்கு முழு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு முற்றிலுதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் உதகை நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் பிளாஸ்டிக் அரைவை இயந்திரம் கடந்த வாரம் வைக்கப்பட்டது.

இதனைத் தாெடர்ந்து. இன்று உதகை பேருந்து நிலையத்தில், அந்த பிளாஸ்டிக் அரவை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.
இதில், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்களுடன் வரும் சுற்றுலா பயணிகள் அந்த இயந்திரத்தில் அதை போடும் போது, அது அரைக்கப்பட்டு துகள்கள் மற்றும் தாவர கழிவுகள் மூலம் உரமாக மாற்றப்பட்டு பூங்காவில் உள்ள பல்வேறு பூச்செடிகளுக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை மாவட்டம் முழுவதும் அமைக்கு்ம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.