திருப்பூர் : திருப்பூரில் அடுத்ததடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்துவிட்டு, நகை மற்றும் பணமில்லாத வீட்டின் டிவியை எடுத்து வந்து ரோட்டில் எறிந்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் போயம்பாளையம், வடிவேல் நகரை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 10 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு அடுத்ததடுத்த வீடுகளிலும் திருட முயற்சித்துள்ளார்.

ஆனால் மற்ற வீடுகளில் பணம் நகை எதுவுமில்லாதததால், ஆத்திரத்தில் 40 ஆயிரம் மதிப்பிலான டிவியை எடுத்து வந்து ரோட்டில் வீசி சென்றுள்ளான் அந்த திருடன். முகத்தை துணியால் மறைத்து வந்த அந்த மர்ம நபர், அங்கிருந்த விளக்குகளை அணைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது.
ஒரு வீட்டில் திருடும் முன் மற்ற வீடுகளின் கதவுகளை வெளியில் தாழிட்டு திருட சென்றுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.