பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது; சுகாதாரமான நீலகிரியை உருவாக்க கல்லுாரி மாணவியர் விழிப்புணர்வு

நீலகிரி : நீலகிரியில், முதல் முறையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்க, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.

நீலகிரி : நீலகிரியில், முதல் முறையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்க, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.

இதன்பேரில், 'எச்சில் இல்லாத சுகாதாரமான நீலகிரி' என்ற தலைப்பில், குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி வணிகவியல் துறை மாணவியர் சார்பில், தெருமுனை பிரச்சாரம் இன்று நடந்தது. 

முன்னதாக, குன்னுார் சிம்ஸ் பூங்கா, பெட்போர்டு, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முன்னாள் தமிழ் துறை இணை பேராசிரியை சுஜாதா தலைமை வகித்து பேசினார்.

'பொது இடங்களிலும், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் எச்சில் துப்ப கூடாது; மீறி துப்பினால், அபராதம் கட்ட நேரிடும்,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...