நீலகிரி : கூடலுார் அருகே, பூட்டிய வீட்டை உடைத்து, நகை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

கூடலுார், புளியாம்பாறை அருகேயுள்ள புளியவம்வயல் கிராமத்தை சேர்ந்தவர், மயில்வாகனம் (58). இவர், கடந்த, 11ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு, பந்தலுார், அய்யன் கொள்ளியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து, 12ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, வீட்டுக்கு வந்து, பார்த்தபோது, பின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்து ஐந்து பவுன் நகை காணாமல் போனது தெரிய வந்தது.
இது குறித்து, தேவர்சோலை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக, நாடுகாணியை சேர்ந்த பாலசுப்ரமணி (40) என்பவரை கைது செய்து நகைகளை மீட்டனர்.