தென்னிந்திய தோட்ட அதிபர்களின் 126வது மாநாடு: தரமான தேயிலைத் தூள் தயாரித்த நிறுவனத்துக்கு தங்க இலை விருது

நீலகிரி : குன்னூரில் தென்னிந்திய தோட்ட அதிபர்களின் (உபாசி) 126 வது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தரமான தேயிலைத் தூள் தயாரித்த நிறுவனத்துக்கு தங்க இலை விருது வழங்கப்பட்டது. மேலும், தனியார் தேயிலைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

நீலகிரி : குன்னூரில் தென்னிந்திய தோட்ட அதிபர்களின் (உபாசி) 126 வது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தரமான தேயிலைத் தூள் தயாரித்த நிறுவனத்துக்கு தங்க இலை விருது வழங்கப்பட்டது. மேலும், தனியார் தேயிலைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

குன்னூரில் தென்னிந்திய தோட்ட அதிபர்களின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 126 வது மாநாடு நடைபெற்றது. இதில் தரமான தேயிலைத் தூள் தயாரித்த கோடநாடு தேயிலை உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு தங்க இலை விருது வழங்கப்பட்டது. 

விழாவில் இந்த விருதை வழங்கிய தேசிய நீதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் விருதுகளை வழங்கிப் பேசியதாவது:

இந்தியாவில் தயாரிக்கப்படும் தேயிலைத் தூளில் 40 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

வெளிநாடுகளில் தேயிலைத்தூளில் அதிக ரகங்கள் உள்ளன. இந்தியாவில் 35 வகையான தேயிலைத் தூள் ரகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் தரமான தேயிலைத் தூள் தயாரித்த தொழிற்சாலைகளுக்கு விருதுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன, என்றார். 

இந்த மாநாட்டில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...