தமிழகம் முழுவதும் இருக்கின்ற சீரடி சாய்பாபா பக்தர்களை ஒன்றாக இணைக்கின்ற 'சாய் சேவா பரிவார்' அமைப்பு கோவையில் துவக்கம்

கோவை : கோவையில் சாய் சேவா பரிவார் அமைப்பின் துவக்க விழா மற்றும் இந்த அமைப்பின் கொடி அறிமுக விழா நடைபெற்றது.

கோவை : கோவையில் சாய் சேவா பரிவார் அமைப்பின் துவக்க விழா மற்றும் இந்த அமைப்பின் கொடி அறிமுக விழா நடைபெற்றது. 

இதன் துவக்க விழா இன்று கோவை வடவள்ளி மருதமலை ரோட்டில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர், வி. சண்முகநாதன் அவர்கள் கலந்து கொண்டு அமைப்பை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். 

கௌரவ விருந்தினராக, பாரதிய ஜனதா கட்சியின் தமிழக செயலாளர், வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். சென்னை சாயி பாத மெய்யடிமை விபூதி சித்தர் ஆசியுரை வழங்கினார்.

சாய் சேவா பரிவார் அமைப்பின் பெண்கள் பிரிவின், மாநில பொது செயலாளர் டாக்டர். பிரீத்தி லக்ஷ்மி இவ்வமைப்பு குறித்து கூறியதாவது :- இந்த சாய் சேவா பரிவார் அமைப்பானது தமிழகம் முழுவதும் இருக்கின்ற ஸ்ரீ சீரடி சாய்பாபா பக்தர்களை ஒன்றாக இணைக்கின்ற முயற்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் புதியதாக கட்டப்படவுள்ள பாபா கோவில் கட்டுமான பணிகளுக்கு உதவுதல், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பல நல திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அலுவலகம் துவக்கியுள்ளோம். 

வயதான மற்றும் பொருளதார வசதி இல்லாதவர்கள் சீரடி செல்ல விரும்பினால் எங்கள் அமைப்பு மூலம் இலவசமாக சீரடி சென்று வர ஏற்பாடு செய்துதருகின்றோம். 

மேலும் எங்களின் சாய் சேவா பரிவார் அமைப்பு மற்றும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆஃப் ஆக்ருதியுடன் இணைந்து இன்று சுமார் ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது. 

விழாவிற்கு சாய் சேவா பரிவார் அமைப்பின் நிறுவனத் தலைவர் எம். சாய் செந்தில்குமார் தலைமை வகித்தார், மாநில தலைவர் சி.என். பரமசிவம், மாநில மகளிர் அணியின் சாய் கவிதா, பொருளாளர் சம்பத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

மேலும், விழாவில் ஏராளமான சாய் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...