கோவையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கணவரும் இரண்டு குழந்தைகளும் மாயமானதாக எழுந்த புகார் ; போலீசாரின் முயற்சியால் மூவரும் மீட்பு

கோவை : கோவையில் தந்தையுடன் சிறுமிகள் இரண்டு பேர் திடீரென மாயமானதாக எழுந்த புகாரை அடுத்து டி-1, ராமநாதபுரம் போலீசார் தந்தை மற்றும் இரண்டு குழந்தையை சென்னையில் இருந்து மீட்டு கோவை அழைத்து வந்துள்ளனர்.


கோவை : கோவையில் தந்தையுடன் சிறுமிகள் இரண்டு பேர் திடீரென மாயமானதாக எழுந்த புகாரை அடுத்து டி-1, ராமநாதபுரம் போலீசார் தந்தை மற்றும் இரண்டு குழந்தையை சென்னையில் இருந்து மீட்டு கோவை அழைத்து வந்துள்ளனர்.

கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள ஸ்ரீநாத் லேக் வியூ குடியிருப்பில் வசித்து வருபவர்கள் ஆஸ்வின்டெரிசாம் (37) மற்றும் கிரிஸ்டி ரொசோரியோ தம்பதியினர்.

இந்த தம்பதிகளுக்கு ஷாஷா லெட்டிசியா (9) சாரா லெட்டிசியா (4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இப்படியிருக்க கடந்த ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி ஆஸ்வின்டெரிசாம் தனது இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனியார் மாலுக்கு செல்வதாக சென்றுள்ளார்.

ஆனால் மாலுக்கு சென்ற கணவனும் குழந்தைகளும் வீடு திரும்பவில்லை என குழந்தைகளின் தாயார் காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளருக்கு காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து தேடும் பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.

இதையடுத்து இராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் லதா அறிவுரையின் பேரில் உதவி ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான தலைமை காவலர் சண்முகசுந்தரம் அடங்கிய தனிப்படையினர் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இப்படி கோவை மாவட்டம், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் இரண்டு குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் தந்தை சென்னையில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மூன்று பேரையும் சென்னையில் இருந்து மீட்டனர்.

இதையடுத்து மூன்று பேரையும் ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் இன்று காலை முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுத்தப்பட்டு பின்பு நீதிபதிகள் முன்னிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...