பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளதால், 'ஓவர் டைம்' மூலம், கூடுதல் கூலியில் வேலை செய்யும் தொழிலாளர்கள்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம், தேயிலை விவசாயத்தை நம்பியுள்ளது. இத்தொழிலை சார்ந்து, 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த, ஓராண்டுக்கு மேலாக, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 18 ரூபாய்க்கு குறையாமல் விலை கிடைத்து வருகிறது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம், தேயிலை விவசாயத்தை நம்பியுள்ளது. இத்தொழிலை சார்ந்து, 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த, ஓராண்டுக்கு மேலாக, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 18 ரூபாய்க்கு குறையாமல் விலை கிடைத்து வருகிறது.

இடுபொருட்களின் விலை உயர்வு, தோட்ட பராமரிப்பு செலவு உள்ளிட்ட செலவீனங்களை ஒப்பிடுகையில், தற்போது கிடைத்து வரும் விலை, விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. இருப்பினும், கடந்த காலங்களில் கிடைத்து வந்த விலையை ஒப்பிடுகையில், விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலான நிலை இருந்து வருகிறது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், காய்ந்து கிடந்த தோட்டங்களில், ஈரப்பதம் அதிகரித்து பசுந்தேயிலை மகசூல் படிப்படியாக உயர்ந்து வருகிறது.



இனிவரும் நாட்களில் மழை தொடரும் பட்சத்தில், மகசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் பசுந்தேயிலை பறிக்க முடியாமல் திணறி வருகின்றனர் என தெரிவிக்கின்றனர். குறித்த நேரத்தில் பசுந்தேயிலை பறிக்காத பட்சத்தில், இலைகள் முதிர்ந்து, கரட்டு இலையாக மாற வாய்ப்புள்ளதால், தொழிலாளர்கள் 'ஓவர் டைம்' மூலம், கூடுதல் கூலியில் பசுந்தேயிலை பறித்து வருகின்றனர். இதன் காரணமாக கூடுதல் செலவினங்கள் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...