கோவை : சோமனூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கில் உடலை வாங்க அவரது மனைவி மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் பொள்ளாச்சியில் தனது மனைவி குழந்தையுடன் வசித்து வந்தார். செல்போன் வியாபாரம் செய்துவரும் ரவிக்குமார் கடந்த 11ம் தேதி வீட்டில் இருந்து பணி நிமித்தம் மேட்டுப்பாளையம் சென்றார். ஆனால் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

பின்னர் கடந்த 13ம் தேதி சோமனூர் அருகே ஒரு தோட்டத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதில் கடந்த 12ம் தேதி ரவிக்குமார் அவருடன் பணியாற்றும் மூன்று பேருடன் மது அருந்தியதாகவும் இதில் போதை அதிகளவில் ஏறிய ரவிக்குமாரை அவருடன் வந்தவர்கள் விட்டுச் சென்றதாகவும் இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால் இறந்த ரவிக்குமாரின் உறவினர்கள் அவரது உடலில் காயங்கள் உள்ளதாகவும், அவரிடமிருந்த ஏ.டி.எம், பணம், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மொபைல் போன்களை காணவில்லை எனவும், அவருடன் மது அருந்திய 3 பேரிடம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கும் வரை ரவிக்குமாரின் உடலை வாங்க மாட்டோம் என ரவிக்குமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொண்டனர்.