குன்னூரில் தென்னிந்திய தோட்ட அதிபர்களின் 126வது மாநாடு ; தங்க இலை விருது வழங்கி கவுரவிப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் தென்னிந்தியா தோட்ட அதிபர்களின் 126வது மாநாடு நடைபெற்றது. இதில் தரமான தேயிலை தூள் தயாரித்த நிறுவனத்திற்கு தங்க இலை விருது வழங்கி தனியார் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் தென்னிந்தியா தோட்ட அதிபர்களின் 126வது மாநாடு நடைபெற்றது. இதில் தரமான தேயிலை தூள் தயாரித்த நிறுவனத்திற்கு தங்க இலை விருது வழங்கி தனியார் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

குன்னூரில் தென்னிந்தியா தோட்ட அதிபர்களின் 126வது இரண்டு நாள் மாநாட்டின் நிறைவு நாளான இன்று குன்னூர் உபாசி அரங்கில் தரமான தேயிலை தூள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகளுக்கு தங்க இலை விருது விழா நடைபெற்றது. இந்த விழாவில் தரமான தேயிலை தூள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகளுக்கு தேசிய நித்திய அயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் விருதுகளை வழங்கினார்.



பின்னர், விழாவில் பேசிய அவர், இந்தியாவில் தயாரிக்கும் தேயிலை தூள் 40 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் வெளிநாடுகளில் அதிக வகையான தேயிலைத்தூள் ரகங்கள் உள்ளதாகவும் இந்தியாவில் 35 வகையான தேயிலை தூள் ரகங்கள் உள்ளன என கூறினார்.



இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் தயாரித்த தரமான தேயிலை தூள் தொழிற்சாலைகளுக்கு அதிக விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...