திருப்பூர் : திருப்பூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்றுமதிக்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆடைகள் தீயில் எரிந்து சாம்பலானது.

திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் அமைந்துள்ளது சிட்கோ தொழிற்பேட்டை. இங்கு ஏராளமான பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதனிடையே இன்று இங்குள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தின் ஒரு பகுதியில் பற்றிய தீயானது மளமளவென நிறுவனம் முழுவதும் பரவ தொடங்கியது.

இதையடுத்து சம்பவம் குறித்து அங்குள்ள தொழிலாளர்கள் தீயணைப்புத் துறையினருக்குக் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர் இந்த தீ விபத்தில் ஏற்றுமதிக்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான பின்னலாடைகள் தீயில் எரிந்து சாம்பலானது.