கோவை : கோவை இரயில் நிலையம் அருகே உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகத்தில் மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பாக சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களின் பணியைப் பாராட்டித் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையின் டிஜிபி காந்திராஜன் நற்சான்றிதழ்கள் வழங்கினார்.

தீயணைப்புத் துறை என்பது "காப்பதே எமது கடமை" என்ற வரியைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படக்கூடிய துறை. இவர்கள் தீயணைப்பதுடன் நின்றுவிடாமல் பல்வேறு மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்கள் மற்றும் விபத்துகளில் தீயணைப்பு வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு பல்வேறு வீர சாகசங்களைச் செய்து உள்ளனர்.
குறிப்பாக இன்று மேற்கு மண்டல எல்லைகளான நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு, சாலையில் விழுந்த மரங்கள், மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி, அதேபோல் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, கோவையில் அண்மையில் பெய்த மழை காரணமாக பவானி மற்றும் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, ஆற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள், குறிப்பாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களுக்கு பாராட்டுகள் வழங்கப்பட்டது.
அதேபோல தீயணைப்புத் துறை சார்பாக பள்ளிகளில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் குறித்து கட்டுரைப்போட்டி நடத்தி, அதில் சிறப்பாக கட்டுரை எழுதிய 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்குப் பரிசுகளும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த பாராட்டுக்களையும் நற்சான்றிதழ்களையும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் டிஜிபி காந்திராஜன் வழங்கினார்.