கோவை : மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் கல்லார் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் அரசுப்பேருந்து லாரி, கார் என நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டு சாலையின் நடுவே நின்றதால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி குன்னூர் சாலையின் வழியே அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது, அப்போது உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இரும்பு ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று தாறுமாறாக வந்து கொண்டிருந்தது. அந்த லாரி முன்னே சென்ற கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று எதிரே வந்த கேஸ் சிலின்டர் வாகனம் மீது மோதியது, பின்னர் எதிரே வந்த அரசுப்பேருந்து மீது மோதியது. அதற்குப் பின்னர் ஒரு இருசக்கர வாகனத்தின் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், இருசக்கர வாகனத்தில் வந்தவர் என மூவர் காயமடைந்தனர். விபத்து ஏற்பட்டதில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி சாலையின் நடுவே நின்றது. இதனால் மற்ற வாகனங்கள் அனைத்தும் சாலையைக் கடக்க முடியாமல் நீண்டதூரம் வரிசை கட்டி நின்றதில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு, பின் கோவை அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்தால் சாலைகளின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன, இதனால் ஒரு மணிநேரமாக வாகன ஓட்டிகள் செய்வதறியாது நின்றனர், பின்னர் காவல்துறை போக்குவரத்தைச் சீர் செய்த பின்னர் மீண்டும் போக்குவரத்து துவங்கியது..விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.