நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனைக்குச் செல்லும் வழியில், ஒரு கோடியே 89 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட 3 கிலோ மீட்டர் சாலையைத் திறந்து வைத்தார்.

பின்னர், பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2500 ஹெக்டர் அளவிலான விளைநிலங்களுக்கு காய்கறி வீரிய விதைகளை வழங்கிய அமைச்சர் வேலுமணி, 250 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடக் கூடிய கமலா ஆரஞ்சு நாற்றுகளையும் விவசாயிகளுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்குதல் மற்றும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பிற்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து உச்ச நீதிமன்றத்திலேயே தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் கேட்கும் உதவியை அரசு செய்து கொடுக்கும் என்றார்.

மேலும், 50 ஆண்டுகாலத்திற்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளதாகவும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்தியாவிலேயே அதிக கடன் வழங்கியது தமிழக அரசு தான் என்று கூறிய அவர், உதகையில் மருத்துவக் கல்லூரி அமைப்பது தொடர்பாக முதல்வரிடம் வலியுறுத்தப்படும் எனவும் அம்மாவின் சொந்த மாவட்டம் நீலகிரி என்பதால் பல்வேறு திட்டங்களையும் தற்போது நிறைவேற்றி வருவதாக கூறினார்.