கோவையில் திமுக இளைஞரணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை : கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.துவக்கி வைத்தார்.

கோவை : கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.துவக்கி வைத்தார்.

திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் இளைஞரணிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற இந்த உறுப்பினர் சேர்கையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ தலைமையிலும், புலியகுளம் பெரியார் சிலை அருகே மாவட்ட அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமையிலும் நடைபெற்ற முகாம்களை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உத்திரவின்பேரில் தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம் நடைபெறுவதாகவும் இந்த முகாம் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களை முகாமில் சேர்க்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேபோல், ஆவாரம் பாளையம் பேருந்து நிலையம் அருகிலும், கணபதி பகுதியிலும், வடவள்ளி பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம் உள்ளிட்ட 6 இடங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...