வரும் ஜனவரி 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் : கள் நல்லசாமி

கோவை : வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.


கோவை : வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளரும், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான நல்லசாமி கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 



அப்போது அவர் கூறியதாவது, 1947 ஆம் ஆண்டு நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் விவசாயத்தின் பங்களிப்பு 65 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது வெறும் 15 சதவீதமாக குறைந்துள்ளது. 60 விழுக்காடு மக்கள் சார்ந்திருக்கும் விவசாயத்திற்கு பட்ஜெட்டில் 2.5 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. விவசாய நாடான இந்தியா 70 சதவீதம் சமையல் எண்ணெய் நுகர்விற்கும், 60 சதவீத பருப்பு நுகர்விற்கும் இறக்குமதியையே நம்பியுள்ளது. இதனால் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு பாதிக்கப்படுவதாக கூறினார்.

மேலும், தொழிற்துறைக்கு கொடுத்த முன்னுரிமையை, விவசாயத்திற்கும் கொடுத்திருந்தால் நாடு வல்லரசாகி இருக்கும். தற்போது நாடு சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது. வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட தொழில்களுக்கு இந்தியாவில் சிகப்பு கம்பளம் விரித்ததன் விளைவாக நிலம், நீர்,காற்று என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஆயத்த ஆடை தொழிலால் நொய்யலாறு இறந்து விட்டது. கடந்த 8 நாட்களில் 25 டி.எம்.சி அளவிலான காவிரி நீர் வீணாக கடலில் கலந்தது. காவிரியில் தினசரி நீர் பங்கீட்டை மேற்கொண்டிருந்தால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்காது. குறுவை சாகுபடியும் சாத்தியமாகி இருக்கும் என்றார்.

அதேபோல, கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு அளித்துள்ள உணவு தேடும் உரிமை. இதை வலியுறுத்தி வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என கூறிய நல்லசாமி, சிறு குறு விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வூதியத்திற்கு இணையாக வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...