நீலகிரி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 227 கோரிக்கை மனுக்கள் ஏற்பு

நீலகிரி : நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 227 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட்திவ்யா பெற்றுக்கொண்டார்.

நீலகிரி : நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 227 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட்திவ்யா பெற்றுக்கொண்டார்.



நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட்திவ்யா அவர்கள் தலைமையில் கடந்த 9ம் தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 227 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்களிடம் பொதுமக்கள் அளித்த இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு துறை ரீதியான அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.



இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாட்கோ மூலம் இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் ரூ.7,79,125/- இலட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய லோடு வாகனத்தையும், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் துணிக்கடை மற்றும் பெட்டிக்கடை வைப்பதற்காக தலா ஒரு பயனாளிக்கு ரூ.20,000/- வீதம் 6 பயனாளிகளுக்கு ரூ.1,20,000/-த்திற்கான காசோலையினையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கட்டுமான தொழிலாளர்கள் விபத்து நிதியிலிருந்து உதகை சன்சைன் ஓட்டல் அருகில் மண்சரிந்து விழுந்து உயிரிழந்த தேவி என்பவரின் மகள்களுக்கு ரூ.2,50,000/-த்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...