கோவை : மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்று ஏற்பட்ட வெள்ளத்தால் 50,000 வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழையானது இந்தாண்டு மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மிகதீவிரமாக பெய்தது. குறிப்பாக கேரளா மற்றும் நீலகிரித்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் பவ பகுதிகளிலும் பரவலாக தென்மேற்கு பருவ மழையானது பெய்தது. தொடர்ந்து பெய்த பருவமழை காரணமாக பில்லூர் அணை மூன்று முறைக்கு மேல் நிரம்பியதால் அதன் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், வெளியேற்றப்பட்ட உபரி நீர் பவானி சாகர் அணையை அடைவதால் பவானி சாகர் அணை 97அடியை எட்டி தண்ணீர் தேக்கப்பட்டதால் சிறுமுகை லிங்காபுரம், காந்தவயல், கூத்தாமண்டி போன்ற பகுதிகளில் பயிர் செய்யப்பட்டிருந்த ஏராளமான வாழை மரங்களை தற்போது தண்ணீர் சூழத்துவங்கியுள்ளன. லிங்காபுரம்,காந்சவயல், உளியூர் போன்ற கிராமங்களில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பவானி ஆற்றின் வெள்ளம் காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக மாறி வருகிறது.

மேலும், தற்போது வாழை மரங்களின் அடிப்பகுதியில் தண்ணீர் படிப்படியாக சூழ்ந்து வருவதால் பவானி சாகர் அணையின் நீர் மட்டம் உயர உயர மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகிவிடும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெள்ளத்தில் வாழை மரங்கள் மூழ்குவதால் சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.