கோவையில் வாடகைக்கு குடியிருந்துவிட்டு போகியத்திற்கு குடியிருந்ததாக ரூ.50 லட்சம் மோசடியில் ஈடுபட முயன்ற நபர் கைது

கோவை : கோவை அடுத்த தடாகம் பகுதியில் வாடகைக்கு குடியிருந்தவர் போகியத்திற்கு குடியிருந்ததாக போலியான ஆவணங்களை தயார் செய்து மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவத்தில் மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை : கோவை அடுத்த தடாகம் பகுதியில் வாடகைக்கு குடியிருந்தவர் போகியத்திற்கு குடியிருந்ததாக போலியான ஆவணங்களை தயார் செய்து மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவத்தில் மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை தடாகம் சாலை அருகே உள்ள கோவில் மேட்டில் வசித்து வரும் சண்முகத்தின் மகள் கலைவாணி(22). இவர்களுக்கு தடாகம் சாலையில் உள்ள வேலாண்டிபாளையத்தில் சுமார் ஐம்பது லட்ச ரூபாய் மதிப்பில் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அழகு சாமி (43) என்பவர் 2016 ஆம் ஆண்டு முதல் பேக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சண்முகம் உயிரிழந்த பிறகு, அழகு சாமி வாடகைத் தொகை தரவில்லை.

இதைத்தொடர்ந்து சண்முகத்தின் மகள் கலைவாணி அழகு சாமியிடம் கேட்டபோது, அவர் 11 லட்ச ரூபாய்க்கு போக்கிய ஒப்பந்தம் போட்டு இருப்பதாகவும் அந்த தொகையை கொடுத்தால் காலி செய்வேன் எனவும் இல்லை என்றால் 20 லட்ச ரூபாய்க்கு தனக்கே கிரயம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து கலைவாணி, வாடகைக்கு குடியிருந்த அழகு சாமியும், அவரது மனைவி உஷாவும் சேர்ந்து, போலியான ஆவணங்களை தயாரித்து, எங்கள் சொத்தை அபகரிக்க முயற்சிசெய்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் ஆகியோரது உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் ஜமுனா தலைமையிலான மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி, கொலை மிரட்டல், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதன் இறுதியில், அழகு சாமி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...